"என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை".. டெல்லி துணை நிலை ஆளுநர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

0 3164

மனைவி தமக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை டெல்லி துணைநிலை ஆளுநர் எழுதியிருப்பதாக என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், துணை நிலை ஆளுநர் சக்சேனா தன்னை தினமும் திட்டும் அளவுக்கு தமது மனைவி கூட திட்டியதில்லை என்றும், கடந்த 6 மாதங்களில் ஆளுனர் எழுதியது போன்று தமது மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை தனக்கு எழுதியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு துணைநிலை ஆளுநரை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments